முழு கடைஅடைப்பு போராட்டத்துக்கு வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் - ஜி.கே.மணி பேட்டி
இன்று நடைபெறும் முழு கடைஅடைப்பு போராட்டத்துக்கு வணிகர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று ஈரோட்டில் ஜி.கே.மணி கூறினார்.
ஈரோடு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முழு கடைஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த போராட்டத்திற்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆதரவு கேட்டு வருகிறார். அவர் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு சென்னிமலை ரோட்டில் உள்ள கடைக்காரர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மத்திய அரசின் நிலை பற்றி தமிழகத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கும் தெரிந்து உள்ளது. இதனால் அவர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முழு கடைஅடைப்பு போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் நடத்தவில்லை. விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் காவிரி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட உள்ளது.
காவிரி ஆற்று தண்ணீர் சென்னை, திருப்பூர், கோவை, நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்பட 19 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இதேபோல் 12 மாவட்டங்களின் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
காவிரி நதிநீர் பங்கீட்டில் மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது. எனவே மத்திய அரசை கண்டித்து நடத்தப்படும் முழு கடை அடைப்பு போராட்டம் வெற்றி பெறும். இந்த போராட்டத்துக்கு அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தலைமை வகிக்கிறார்கள்.
ஈரோட்டில், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொள்கிறார்கள்.
கடைஅடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள் ஆதரவு தெரிவித்து பகல் 12 மணி வரை கடைகளை அடைப்பதாக கூறி உள்ளனர்.
ஆனால் நாள் முழுவதும் கடையை அடைத்து போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று ஆதரவு கேட்டு வருகிறோம்.
எங்களுடைய போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, த.மா.கா. உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.