கோபி அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல், ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
கோபி அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் பூபதி (வயது 38). இவருடைய நண்பர் செல்வபாண்டியன் (40). ஓட்டல் உரிமையாளர். சம்பவத்தன்று உடலில் காயங்களுடன் பூபதி, கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடந்தையாக செல்வபாண்டியனும் சென்றார்.
அப்போது அங்கு பணியில் டாக்டர் மாலினி என்பவர் இருந்தார். உடனே அவர் பூபதிக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினார். டாக்டர் மாலினிக்கு உதவியாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் நாகராஜ், சண்முகசுந்தரம், ஈஸ்வரன் ஆகியோர் இருந்தனர்.
அப்போது டாக்டர் மாலினிக்கும், பூபதி, செல்வபாண்டியன் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பூபதி, செல்வபாண்டியன் ஆகியோர் சேர்ந்து டாக்டர் மாலினி மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களை திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து பூபதி, செல்வபாண்டியன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பாரதி உத்தரவிட்டார்.