குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலகம் முற்றுகை
குடிநீர் கேட்டு தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கீரனூர்,
பழனி அருகே தொப்பம்பட்டி ஒன்றியம் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த கிராமம் குமாரபாளையம். இங்கு 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதானதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இதுதவிர தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை. சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாருவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், தங்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனக்கோரி காலிக்குடங்களுடன் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஈஸ்வரி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, ஓரிரு நாட்களில் மின்மோட்டார் பழுதை சரிசெய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். அதுமட்டுமின்றி பழுதான தெருவிளக்குளை மாற்றவும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.