2 குடிசை வீடுகள் எரிந்து நாசம் தீ வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்
திருப்பத்தூர் அருகே 2 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமானது. தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள விஷமங்கலம் கிராமம் ஏரிவட்டம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 40), கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான 2 குடிசை வீடுகள் அருகருகே உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் குமரேசன் வீட்டின் மேற்கூரை ஓலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த தீயானது மளமளவென பக்கத்து வீட்டின் மேற்கூரை ஓலை மீதும் பரவியது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகளிலும் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
அதேபோல், கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் வீடும் தீப்பிடித்து எரிந்தது.
தொடர்ந்து வீடுகளில் தீ விபத்து ஏற்படுவதை கண்டித்து அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் - திருவண்ணாமலை மெயின் ரோட்டில் அங்கநாதவலசை கூட்ரோடு என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தொடர்ந்து இப்பகுதியில் தீ விபத்து ஏற்படுகிறது, எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், தீ வைக்கும் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும், 40 ஆண்டுகளாக இப்பகுதியில் நாங்கள் குடியிருந்து வருகிறோம், எங்களுக்கு பட்டா போட்டு, வீடுகளுக்கு கான்கிரீட்டால் ஆன மேற்கூரை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.