வன்கொடுமை சட்ட திருத்தத்தை கண்டித்து சிவகங்கையில் சாலைமறியல்; 117 பேர் கைது

வன்கொடுமை சட்ட திருத்தத்தை கண்டித்து சிவகங்கையில் சாலைமறியலில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-11 00:26 GMT

சிவகங்கை,

ஆதிதிராவிடர், பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தத்தை கண்டித்தும், தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் இயக்கங்கள் சார்பில் சிவகங்கையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார். இதில் தியாகி இமானுவேல் பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கந்தசாமி, செயலாளர் பொன்னுச்சாமி, துணைச் செயலாளர்கள் வக்கீல் மதி, சுரேஷ், மாவட்ட துணைத்தலைவர் சாந்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியா, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ஆதி தமிழர் பேரவை மாவட்ட தலைவர் பால்பாண்டி, பொதுச் செயலாளர் திருமுருகசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 117 பேரை சிவகங்கை டவுன் போலீசார் கைதுசெய்தனர்.

மேலும் செய்திகள்