திருப்பூரில் சரண் அடைந்த வாலிபரை கோர்ட்டுக்குள் புகுந்து இழுத்து வந்த போலீசார்
திருப்பூரில் கோர்ட்டில் சரண் அடைந்த வாலிபரை, கோர்ட்டுக்குள் புகுந்து கோவை போலீசார் இழுத்து வந்தனர். இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் கடந்த 3-ந் தேதி சிட்டிபாபு என்ற ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை சிங்காநல்லூர் போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த குனியமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்(வயது 29) என்பவர் திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1-ல் நேற்று காலை மாஜிஸ்திரேட்டு கவியரசன் முன்னிலையில் சரண் அடைந்தார்.
கோர்ட்டுக்குள் சந்தோஷ் அமர்ந்து இருந்தார். மதியம் 12.30 மணி அளவில் சிங்காநல்லூர் போலீசார் 3 பேர் ஒரு காரில் திருப்பூர் வந் தனர். திருப்பூர் கோர்ட்டு வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு 2 போலீசார் மட்டும் சாதாரண உடையில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1-க்குள் நுழைந்து, அங்கிருந்த சந்தோசை பிடித்து காரில் ஏற்றுவதற்காக அழைத்துச்சென்றதாக தெரிகிறது.
சாதாரண உடையில் வந்த 2 பேர் தன்னை இழுத்துச்சென்றதை பார்த்து சந்தோஷ் சத்தம்போட்டார். இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. சந்தோசை அங்கிருந்த காரில் அவர்கள் ஏற்ற முயன்றதாக தெரிகிறது. அதற்குள் அங்கு வந்த வக்கீல்கள் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். சரண் அடைந்து கோர்ட்டுக்குள் இருக்கும் ஒருவரை, எப்படி கோர்ட்டுக்குள் நுழைந்து அழைத்துச்செல்லலாம்? என்று வக்கீல்கள் சிங்காநல்லூர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
பின்னர் சந்தோஷ் மீண்டும் கோர்ட்டுக்குள் கொண்டு வரப்பட்டார். இதைதொடர்ந்து சிங்காநல்லூர் போலீசாரை கோர்ட்டுக்குள் அழைத்து, மாஜிஸ்திரேட்டு கடுமையாக எச்சரித்தார். கோர்ட்டு வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து வந்தனர். அதன்பிறகும் சிங்காநல்லூர் போலீசார் கோர்ட்டு வளாகத்தில் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தனர். வக்கீல்கள் ஒருபுறம் திரண்டு நின்றனர். நிலைமையை சமாளிப்பதற்காக, சிங்காநல்லூர் போலீசாரை அங்கிருந்து திருப்பூர் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கோர்ட்டு வளாகத்தில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.