கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேர் கைது
வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் சாலைமறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஒரு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக உள்ளதாகவும், அந்த தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தியும், கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அத்துடன் பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்குள் செல்லும் கேட் மூடப்பட்டு, அதற்கு முன்பு போலீசார் பாதுகாப்புக்காக நின்றனர். இந்த நிலையில் அந்த கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று காலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சிவஞானம் தலைமையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக அங்கிருந்து ஊர்வலமாக வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். உடனே அவர்கள் சாலையில் படுத்து உருண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி, கைது செய்து வாகனங்களில் ஏற்றினார்கள். இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்பு செயலாளர் ஆறுசாமி, ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுச்செயலாளர் நாகராஜ், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த நேருதாஸ், தமிழ்ப்புலி கட்சியை சேர்ந்த இளவேனில், சமூக நீதி கட்சி மாநில தலைவர் பன்னீர்செல்வம் உள்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்துக்குள் அனைத்து தொலை தொடர்பு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் அந்த கூட்டமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.