தெற்கு ரெயில்வேயில் 2726 ஜூனியர் கிளார்க், அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்

தெற்கு ரெயில்வேயில் ஜூனியர் கிளார்க் பணிகளுக்கும், அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கும் 2 ஆயிரத்து 726 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

Update: 2018-04-10 05:23 GMT
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக செயல்படுகிறது இந்தியன் ரெயில்வே. இதன் தெற்கு மண்டலம், சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. தற்போது இந்த மண்டலத்தில் ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 74 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றொரு அறிவிப்பின்படி அப்ரண்டிஸ் பயிற்சிப்பணிக்கு 2 ஆயிரத்து 652 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 8, 10,12-ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கான பணியிடங்கள் இவை.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

ஜூனியர் கம் டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 47 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் பிளஸ்-2 படித் திருப்பதுடன், தட்டச்சு திறமையும் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, 23-4-2018-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

பயிற்சிப் பணியிடங்கள்


பயிற்சிப் பணியிடங்களுக்கு 2 ஆயிரத்து 652 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியாக பிட்டர் - 587 இடங்கள், எலக்ட்ரீசியன் - 734, வெல்டர் (கியாஸ் எலக்ட்ரிக்) - 456 , எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 112, கார்பெண்டர் - 154, டீசல் மெக்கானிக் - 104, பிளம்பர் - 108, வயர்மேன் - 68 இடங்கள் உள்ளன. இவை தவிர மெஷினிஸ்ட், டர்னர், அட்வான்ஸ் வெல்டர், பெயிண்டர், ஏ.சி. மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், பிரஸ்ஸர் எம்.டி.எல்., பிட்டர் போன்ற பணி களுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.

15 முதல் 24 வயதிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு படிப்புடன் ஐ.டிஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 11-4-2018-ந் தேதியாகும். இவை பற்றிய விவரங்களை http://www.sr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்