குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

ஜலகண்டாபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-09 22:32 GMT
ஜலகண்டாபுரம்,

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் கிராமம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

குடிநீர் பிரச்சினை தொடர்பாக அப்பகுதி மக்கள் கிராம செயலாளரிடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் வினியோகம் செய்ய எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், உடனே குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை 8 மணியளவில் ஜலகண்டாபுரம்-ஆடையூர் ரோட்டில் சவுரியூர் பிரிவு அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜலகண்டாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் கிராம செயலாளர் ஞானதுரையை அழைத்து உடனே குடிநீர் வினியோகம் செய்ய கூறினர். இதைத்தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகு சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்