தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தர்மபுரியில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தம்பிஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமுனியப்பன், தனபால், கோபிநாத், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அன்புவிஜய் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தை கட்சியின் பொருளாளர் டாக்டர் இளங்கோவன் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கட்சி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி எந்தவித தடையும் இன்றி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
தமிழக மக்களின் ஜீவாதாரமாக விளக்கும் காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், கன்னியப்பன், ராமச்சந்திரன், மாநிலபொதுக்குழுஉறுப்பினர்கள் பெருமாள், பழனி, சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் விஜயசங்கர், ராமச்சந்திரன், உதயகுமார், சரவணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.