காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முக்கொம்பு தடுப்பணையில் விவசாயிகள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முக்கொம்பு தடுப்பணையில் விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம் செய்தனர். துவாக்குடி சுங்கச்சாவடியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
ஜீயபுரம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் முக்கொம்பு தடுப்பணையில் நேற்று காலை அந்தநல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த விவசாய சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம் செய்தனர். அவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், சிறுவர்-சிறுமிகளும் பங்கேற்றனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் சோழசேரன், கண்ணன் மற்றும் மகளிரணியை சேர்ந்த லட்சுமி, காமில்பானு, ஷாகிராபானு ஆகியோர் உள்பட 34 பேர் துவாக்குடி அருகே உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரையும் கைது செய்து, திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.