குடும்ப பிரச்சினைக்கு சமரச தீர்வு மையத்தை அணுகுங்கள் மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு
குடும்ப பிரச்சினைகளுக்குக் கோர்ட்டுக்குச் செல்லாமல், சமரச தீர்வு மையத்தை அணுகுங்கள், அங்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி பேசினார்.
வேலூர்,
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் சமரச தீர்வு மையத்தின் 13-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. வேலூரில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கட்டிட வளாகத்தில் இந்த விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் எஸ்.அஜீம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு சமரச தீர்வு மையத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து சட்டப்பணிகள் ஆணைக்குழு கட்டிட வளாகத்தில் பறவைகள் வந்து உணவு உண்டு, தண்ணீர் குடித்துச் செல்லும் வகையில், அங்கு ஒரு பாத்திரத்தில் உணவு மற்றும் தண்ணீர் வைத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், குடும்ப நல கோர்ட்டு நீதிபதி லதா, தொழிலாளர் நல நீதிபதி செல்வசுந்தரி, சமரச தீர்வுமைய மாவட்ட நீதிபதி மதுசூதனன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
குடும்ப பிரச்சினைகளை கோர்ட்டுக்குக் கொண்டு செல்லாமல் சமரச தீர்வு மையம் மூலம் எளிதாக தீர்த்துக் கொள்வது குறித்து, சட்டக்கல்லூரி மாணவர்கள் நாடகமாக நடித்துக் காட்டினர். குடும்ப பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து, குறும்படம் மூலம் விளக்கப்பட்டது.
சமரச தீர்வு மையத்தை அணுகுங்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி பேசுகையில், சொத்துத் தகராறு மற்றும் குடும்ப பிரச்சினைகளுக்காக கோர்ட்டுக்குச் சென்றால் சிறிய பிரச்சினைகளாக இருந்தாலும் நீண்டநாட்கள் நீடிக்கும். இதுபோன்ற சிறிய பிரச்சினைகளுக்குச் சமரச தீர்வு மையங்களில் தீர்வு காணலாம்.
சிறிய பிரச்சினையாக இருந்தாலும் 25 ஆண்டுகள் வழக்கு நீடித்தால் இரண்டு பேருக்கும் பயன் இருக்காது. எனவே நிலப்பிரச்சினை, குடும்ப பிரச்சினைகளுக்குச் சமரச தீர்வு மையங்களை அணுகுங்கள். அங்கு உங்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும். விழா நடந்தால் அங்கு மரக்கன்றுகள் நடுவது வழக்கம். கோடைக்காலத்தை முன்னிட்டு இங்கு பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனை, பொதுமக்களும் பின்பற்றினால் நல்லது, என்றார்.