கூட்டுறவு சங்க தேர்தல்: வேட்புமனுக்களை வாங்க மறுத்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கணபதிபாளையம் கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்புமனுக்களை வாங்க மறுத்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி,
ஆனைமலை அருகே உள்ள கணபதிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 11 நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்கான தேர்தல் வருகிற 16-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அப்போது தேர்தல் அதிகாரி ஆளும் கட்சியினரிடம் மட்டும் வேட்பு மனுக்களை வாங்கி விட்டு, அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தை ஆனைமலை ஒன்றிய தி.மு.க. செயலாளர் தேவ சேனாதிபதி, திப்பம்பட்டி ஆறுச்சாமி உள்ளிட்ட தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர். மேலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தி.மு.க.வினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின், சப்-கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கு சங்க அலுவலகத்தில் 9-ந்தேதி (நேற்று) வேட்பு மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நாங்கள் சங்க அலுவலகத்திற்கு காலை 10 மணிக்கு சென்று வேட்பு மனுவிற்கான விண்ணப்பம் வழங்குமாறு தேர்தல் அதிகாரியிடம் கேட்டோம். அவர் சிறிது நேரம் கழித்து தருவதாக கூறினார். பின் அவர் அ.தி.மு.க.வினரிடம் மட்டும் வேட்பு மனுவை வாங்கி விட்டு, எங்களுக்கு வேட்பு மனு விண்ணப்பத்தை வழங்காமலும், வேட்பு மனுக்களை பெறாமலும் காலை 10.20 மணிக்கு சங்க அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டார்.
தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுக்க பொள்ளாச்சி கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றோம். ஆனால் அங்கு உதவியாளர் தவிர யாரும் இல்லை. மாலை 5 மணி வரை அலுவலகத்தில் இருந்து வேட்பு மனுக்களை பெற வேண்டிய தேர்தல் அதிகாரி சட்டத்திற்கு புறம்பாக காலை 10.20 மணிக்கு அலுவலகத்தை பூட்டி சென்று விட்டார். எனவே ஒருதலைபட்சமாக செயல்படும் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களிடம் இருந்து வேட்புமனுக்களை பெறவும், வேறு தேர்தல் அதிகாரியை நியமித்து தேர்தலை நியாயமான முறையில் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.