காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி, குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடலூரில் சமத்துவ மக்கள் கட்சியினர், அனைத்து குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-04-09 23:00 GMT
கடலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இளைஞரணி செயலாளர் பிரான்சிஸ் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்த்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் (கிழக்கு)சக்கரவர்த்தி, ராஜசேகர் (மேற்கு) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட அவை தலைவர் உலகநாதன், ஒன்றிய செயலாளர்கள் சூர்யபிரசாத், மயில்வேல், விஜயகுமார், நகர செயலாளர்கள் தேவசகாயம், சதீஷ்குமார், நிர்வாகிகள் பழனி, சதாசிவம், லட்சுமணன், சிலம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், நாகை, கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்த இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பினர் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணை பொதுச்செயலாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் மனோகரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன், மாதவன், அப்பாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தை பொதுச்செயலாளர் மருதவாணன் முடித்து வைத்து பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கடலூர் நகர மக்களிடமும், குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைப்பது என்று வலியுறுத்தப்பட்டது. இதில் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுகுமாறன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்