விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
குறைந்தபட்ச ஊதியம் வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு ஊழியர்களுக்கு அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் 1.1.2016 முதல் ஓய்வு பெற்ற துப்புரவு ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரம் பணிக்கொடை, மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இருப்பினும் இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை அமலாக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து தமிழகம் முழுவதும் நேற்று முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள்.
கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் நடந்த இந்த போராட்டத்திற்கு சங்க மாநில துணைத்தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜீவா, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் குமார், செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் ஞானமூர்த்தி, ஏழுமலை, மணி, குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இவர்களது போராட்டம் நேற்று மாலை 6 மணிக்கு பிறகும் நீடித்தது. இதையடுத்து போராட்டக்காரர்களிடம் போலீசார், அரசு அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு ஏற்படாததால் போராட்டம் இரவு வரை நீடித்தது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குவது மற்றும் துப்புரவு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.