காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தே.மு.தி.க. சார்பில் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-04-09 22:30 GMT
தக்கலை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தே.மு.தி.க. சார்பில் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ஸ்ரீகுமார், ஒன்றிய செயலாளர் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்