பிளாஸ்டிக் தடைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு

பிளாஸ்டிக் தடைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு, ரூ.50 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2018-04-08 22:35 GMT
மும்பை,

பிளாஸ்டிக் தடைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ரூ.50 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

மராட்டிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த மாதம் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு மாநிலத்தில் தடை விதித்து உத்தரவிட்டது. இதன்படி பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட டம்ளர்கள், பைகள், கரண்டிகள் உள்பட பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் தடை செய்யப்பட்டது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அரசு தனது தடை உத்தரவை விலக்கிக்கொள்ள மறுத்துவிட்டது.

இந்தநிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையால் மாநிலத்தில் அதன் உற்பத்தி முற்றிலும் சரிந்து ரூ.50 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப் பதாகவும், சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை யிழந்துள்ளதாகவும் மராட்டிய வணிகர்கள் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பினர் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக உணவுப் பொருட்கள் பாக்கிங் செய்யும் தொழில்கள் கடுமையாக பாதிப்படைந் திருப்பதாக அவர்கள் கூறினர்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த சுற்றுச்சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக் பயன்பாட்டு மையத்தின் செயலாளர் எஸ்.கே.ரே, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பிளாஸ்டிக் தடை உத்தரவு பிற்போக்குத்தனமானது என கூறினார். இந்த தடையினால் மளிகை சாமான்கள் வாங்குவதற்குக் கூட பொதுமக்கள் சிரமப்பட வேண்டி இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

பிளாஸ்டிக் பைகளை விட அதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் பொருட்களே சுற்றுச் சூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறும் டென்மார் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆய்வறிக்கையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் பிளாஸ்டிக் தடை உத்தரவுக்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை வரவேற்கத்தக்கது.

சுற்றுச்சூழல் அமைச்சகத் தின் இந்த முடிவு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுத்திருக்க வேண்டும். பால்பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்களை பாக்கிங் செய்வதில் மக்கிப்போகும் பிளாஸ்டிக் குகளை பயன்படுத்தலாம். ஆனால் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எரியப்படும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை அரசு எந்த காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்