தாராவியில் அனுமதியின்றி மரம் வெட்டியவருக்கு ஒரு வாரம் ஜெயில்

ஒரு வாரம் ஜெயில் தண்டனை வழங்கிய கீழ் கோர்ட்டின் தீர்ப்பை செசன்ஸ் கோர்ட்டு உறுதி செய்தது.

Update: 2018-04-08 22:21 GMT
மும்பை,

தாராவியில் அனுமதி யின்றி மரம் வெட்டியவருக்கு ஒரு வாரம் ஜெயில் தண்டனை வழங்கிய கீழ் கோர்ட்டின் தீர்ப்பை செசன்ஸ் கோர்ட்டு உறுதி செய்தது.

மும்பை தாராவி பகுதியில் உள்ள கபில்வாஸ்து குடியிருப்பின் செயலாளராக இருப்பவர் சதாசிவ் காம்ளே (வயது60). இவர் கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் குடியிருப்பு வளாகத்தில் இருந்த தென்னை, நாவல், கொய்யா, குல்மோர் ஆகிய 4 மரங்களை வெட்டினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சதாசிவ் காம்ளே மீது மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மாநகராட்சி யிடம் அனுமதி பெறாமல் மரங்களை வெட்டிய சதாசிவ் காம்ளேவிற்கு ஒரு வாரம் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து அவர் செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த செசன்ஸ் கோர்ட்டு, கீழ் கோர்ட்டு வழங்கிய ஒரு வாரம் ஜெயில் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்