ஆம்புலன்ஸ் சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது கர்ப்பிணி உள்பட 6 பேர் படுகாயம்

தானேயில் ஆம்புலன்ஸ் சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கர்ப்பிணி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-04-08 22:07 GMT
தானே,

நாசிக் மாவட்டம் மாலேகாவில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று பெண் நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் டிரைவர் உள்பட 6 பேர் இருந்தனர். அந்த ஆம்புலன்ஸ் நேற்று காலை தானே ஆனந்த் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, திடீரென அதன் என்ஜினில் இருந்து புகை கிளம்பியது.

இதை பார்த்து டிரைவர் பதறி போனார். அந்த நேரத்தில் துரதிருஷ்டவசமாக ஆம்புலன்ஸ் அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புசுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மும்பை ராஜவாடி மருத்து வமனையில் சேர்த்தனர்.

விசாரணையில் காயமடைந்தவர்கள் பேர் அகில் அகமது (வயது33), முஸ்தாக் அகமது (40), சங்கீலா (35), சுகுர் சேக் (50), அலிடா (65), முகமது சபாப் (18) என்பது தெரியவந்தது. அகில் அகமது தான் ஆம்புலன்சை ஓட்டி வந்தவர் என்பதும், காயம் அடைந்தவர்களில் சங்கீலா கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்