பராமரிப்பு பணி காரணமாக ரெயில்சேவை பாதிப்பு; பயணிகள் அவதி

பராமரிப்பு பணி காரணமாக ரெயில்சேவையில் ஏற்பட்ட பாதிப்பினால் பயணிகள் அவதியுற்றனர்.;

Update: 2018-04-08 22:01 GMT
அம்பர்நாத்,

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள வித்தல்வாடி அருகே நேற்று ரெயில்வே பாலம் கட்டும் பணி நடந்தது. கல்யாண் - வித்தல்வாடி இடையே தண்டவாள சீரமைப்பு பணிகளும் நடந்தது. இதனால் கல்யாண் - கர்ஜத் இடையே நேற்று ரெயில்கள் இயக்கப்படவில்லை.

துறைமுக வழித்தடத்தில் குர்லா - வாஷி இடையே நேற்று காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடந்தது. இதனால் நேற்று காலை முதல் மாலை வரை சி.எஸ்.எம்.டி. - பன்வெல் இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதேபோல மேற்கு ரெயில்வேயில் சாந்தாகுருஸ் - மாகிம் இடையே காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை விரைவு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடந்தது. இதனால் அங்கும் சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்