விசுவகுடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 14 பேர் காயம்
விசுவகுடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான 3-வது ஜல்லிக்கட்டு போட்டி வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவகுடி கிராமத்தில் நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் மாடம் ஊருக்கு அருகாமையில் உள்ள வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்தது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 330-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
14 பேர் காயம்
காளைகள் முட்டியதில் பூலாம்பாடியை சேர்ந்த சசிகுமார் (வயது 22), தொண்டமாந்துறை சேர்ந்த சக்தி (21), சுரேஷ் (22), அன்னமங்கலத்தை சேர்ந்த வைரமணி (25), ஜான் (30), பெரம்பலூரை சேர்ந்த முகமது ஆசிக் (22), வெங்கலத்தை சேர்ந்த ஜீவா (22), சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த மணிபாரதி (21) ஆகிய 8 வீரர்கள் மற்றும் 6 பார்வையாளர்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த சசிகுமார் மட்டும் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசு பொருட்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் சில்வர் பாத்திரம், கியாஸ் அடுப்பு, வேட்டி மற்றும் ரொக்கபரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம், சேலம், அரியலூர், பெரம்பலூர் வேப்பந்தட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் விசுவகுடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரும்பாவூர் போலீசார் செய்திருந்தனர்.