நீட் தேர்வு பயிற்சிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி அமைச்சர் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நீட் தேர்வு பயிற்சிக்கு செல்லும் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதவுள்ள மாணவ - மாணவிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் பொருட்டு 18 ஒன்றியங்களில் 18 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு தற்போது பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி மையங்களில் மொத்தம் 480 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 9 இடங்களில் இலவச உணவு, தங்கும் வசதியுடன் நீட் தேர்வுக்கு பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 83 மாணவ - மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களில் தமிழ் வழியில் பயிலும் 72 மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் அமைந்துள்ள ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியிலும், ஆங்கில வழியில் பயிலும் 11 மாணவர்களுக்கு சென்னையில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி
இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 83 மாணவ - மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் உஷாராணி, நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி, முன்னாள் வணிகவரி ஆலோசனைக் குழு உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன், அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.