காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் ராகி, நிலக்கடலை விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி

ஏரியூர் அருகே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள ராகி, நிலக்கடலை விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-04-08 22:30 GMT
ஏரியூர்,

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்த அளவே வருவதாலும், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறையும் காலங்களில் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் கொளத்தூர், ஏரியூர், வத்தல்பட்டி உள்ளிட்ட ஊர்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, எள் உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவது வழக்கம். மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்தநிலையில் தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஒட்டனூர், நாகமரை, செல்லமுடி, பூச்சூர், கவுண்டனூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் உழவு பணி மேற்கொண்டு விவசாயம் செய்து உள்ளனர். தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் பயிரிட்டுள்ள கம்பு, ராகி, சோளம், எள் உள்ளிட்ட பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த பயிர்கள் விரைவில் அறுவடைக்கு வரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூருக்கு வரும் காவிரி ஆறு தற்போது குட்டை போல காணப்படுவதையும், பயிர்கள் பச்சை பசேலென காட்சி அளிப்பதையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். 

மேலும் செய்திகள்