தமிழர்கள் வசிக்கும் 17 நாடுகளில் தமிழ்வளர் மையத்தின் கிளைகள் தொடங்கப்படும் பாண்டியராஜன் பேச்சு
ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசிக்கும் 17 நாடுகளில் தமிழ் வளர் மையத்தின் கிளைகள் தொடங்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் தமிழ்ச்சங்கம் சார்பில் சித்திரை திருவிழா, சிந்தனை முழக்கம் என்ற தலைப்பில் நேற்று நாமக்கல்லில் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு நாமக்கல் தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் குழந்தை வேல் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்தியாவில் தமிழ் பேசுபவர்கள் சுமார் 10 கோடி தவிர, வெளிநாடுகளில் 1.36 கோடி பேர் தமிழ் பேசுபவர்களாக உள்ளனர். உலக அளவில் தமிழ்மொழி 16–வது இடத்தில் உள்ளது. தமிழ் மொழியை 4 ஆண்டுகளுக்குள் முதல் 10 மொழிகளில் ஒன்றாக கொண்டு வர முயற்சி எடுப்போம்.
உலகத்தில் உள்ள 238 நாடுகளில் தமிழர்கள் 144 நாடுகளில் வசிக்கின்றனர். குறிப்பாக 17 நாடுகளில் 1 லட்சத்துக்கும் மேல் தமிழர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் பிறமொழியை தாய்மொழியாக கொண்டோர், தமிழ் கற்றுக்கொள்வதை எளிமைப்படுத்தினால், தமிழ் மொழியை உலகெங்கும் எளிதில் பரவச்செய்ய முடியும்.
கற்பிக்கும் பாடத்திட்டங்களை எளிமைப்படுத்தினால், தமிழ் மொழியை பிற மொழியினரும் கற்க முன்வருவார்கள். மொழியை கற்றுக்கொடுப்பதும் ஒருவகையில் திறன் வளர்ப்பே ஆகும். இந்தி மொழியை மிகவும் எளிமைப்படுத்தி, இந்தி பிரசார சபாவின் மூலம் இந்தியை தாய்மொழியாக கொள்ளாத 35 கோடி பேருக்கு கற்பித்து உள்ளனர்.
இந்தி பிரசார சபா போன்று தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர் மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை கொண்ட 17 நாடுகளில் இம்மையத்தின் கிளை உருவாக்கப்பட்டு, அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு தமிழை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
நாமக்கல்லில் உயிரோட்டம் உள்ள அருங்காட்சியகம் அமைக்கப்படும். உலக தமிழ்ச்சங்கத்தின் கீழ் 100 தமிழ்ச்சங்கங்களை கொண்டுவர திட்டமிட்டு உள்ளோம். தமிழகம் மட்டுமல்லாது 10 ஆயிரம் தமிழ் மக்களுக்கு மேல் வசிக்கும் நாடுகளில் இருந்தும், தமிழ்ச்சங்கங்களை இந்த பட்டியலில் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான தமிழ்ச்சங்கங்கள் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது :–
நாமக்கல் தமிழ்ச்சங்கத்துக்கு கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணியில் சங்க நிர்வாகிகளுடன் நானும் உடன் இருப்பேன். நாமக்கல் நகரின் குடிநீர் பிரச்சினை குறித்து இங்கு தெரிவிக்கப்பட்டது. ரூ.135 கோடி செலவில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் நாமக்கல் நகராட்சிக்கு என தனியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாமக்கல் நகருக்கு எந்த காலத்திலும் குடிநீர் பிரச்சினை ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., உலக தமிழ்ச்சங்க இயக்குனர் சேகர், அமைப்புத்தலைவர் அரசு பரமேஸ்வரன், கவுரவ தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர் நாராயணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கலைநிகழ்ச்சியும் நடந்தது.