ரபேல் போர் விமானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்தது ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்துவிட்டு ரபேல் போர் விமானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்தது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி மாதம் ‘மக்கள் ஆசி’ என்ற பெயரில் பயணத்தை ஐதராபாத் கர்நாடக பகுதியில் இருந்து தொடங்கினார். அங்கிருந்து மும்பை-கர்நாடக, கடலோர கர்நாடக, பழைய மைசூரு மண்டலத்தில் ராகுல் காந்தி பயணம் செய்தார்.
‘மக்கள் ஆசி’ பயணத்தின் நிறைவாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் பெங்களூரு மண்டலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இந்த ‘மக்கள் ஆசி’ பயணத்தின் நிறைவு நாள் பொதுக்கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த கூட்டம், சிறிது தாமதமாக அதாவது 6.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
பெங்களூரு இன்று உலக அளவில் புகழ் பெற்று வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு வசிக்கிறார்கள். வருபவர்களை வாழ வைக்கும் மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. பெங்களூருவுக்கு வருபவர்களை கன்னடர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். கன்னடர்கள் அடைக்கலம் கொடுக்கிறார்கள்.
நான் கர்நாடகத்தில் கடந்த 3 மாதமாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றேன். சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் பேராதரவு வழங்குவதை பார்க்க முடிந்தது. இது பசவண்ணர், கெம்பேகவுடா பிறந்த மண். பசவண்ணரின் கொள்கைப்படி கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடத்தி இருக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையே நடைபெறும் தேர்தல் ஆகும்.
ஒருபுறம் பசவண்ணரின் கொள்கைப்படி நடக்கும் காங்கிரசுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைப்படி நடக்கும் பா.ஜனதாவுக்கும் இடையே தான் இந்த தேர்தல் நடக்கிறது. பசவண்ணர் மறைந்து பல நூற்றாண்டுகள் ஆகி இருந்தாலும் அவருடைய கொள்கைகள் கர்நாடகத்தில் மூலை முடுக்கெல்லாம் பரவி கிடக்கின்றன. பசவண்ணரின் சொன்னபடி நடந்து கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டின்படி காங்கிரஸ் செயல்படுகிறது.
கர்நாடகம் வரும்போது பிரதமர் மோடி ஊழல் ஒழிப்பு பற்றி பேசுகிறார். ஆனால் பல்வேறு ஊழல்களை செய்த எடியூரப்பாவை அருகில் உட்கார வைத்துக் கொண்டு இதை மோடி பேசுகிறார். அமித்ஷா மகன் நிறுவனத்தின் சொத்து மூன்றே மாதங்களில் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. சொத்துகளை சேர்ப்பதில் அமித்ஷா சாணக்கியராக செயல்படுகிறார்.
நிரவ்மோடி மற்றும் இன்னொருவர் ரூ.30 ஆயிரம் கோடி வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டனர். நிரவ்மோடி பிரதமருக்கு நன்கு அறிமுகமானவர். இதுபற்றி மோடி இதுவரை பேசவில்லை. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு விமானத்தின் விலை ரூ.750 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது. விமானங்களை வாங்கும் டெண்டர் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
மோடி பிரதமரான பிறகு அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. ஒரு ரபேல் விமானத்தின் விலையும் ரூ.1,550 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டெண்டரை மோடி தனது நண்பருக்கு வழங்கியுள்ளார். அவருக்கு வங்கியில் ரூ.40 ஆயிரம் கோடி கடன் உள்ளது. எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்துவிட்டு அந்த விமானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்தது ஏன்?.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 150 டாலரில் இருந்து 70 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறையவில்லை. மாறாக அதன் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைவால் அரசுக்கு கிடைத்த பணம் எங்கே போனது?. கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல் விலை 210 சதவீதமும், டீசல் விலை 430 சதவீதமும் உயர்ந்துள்ளது.
தொழில் அதிபர்களின் கடன் ரூ.2.30 லட்சம் கோடியை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் விவசாய கடனை தள்ளுபடி செய்ய மோடி மறுக்கிறார். அம்பேத்கர் பற்றி மோடி பேசுகிறார். ஆனால் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் பற்றி அவர் வாய் திறப்பது இல்லை. எதிர்க்கட்சிகளை விலங்குகளுடன் அமித்ஷா ஒப்பிடுகிறார். இது பா.ஜனதாவின் கலாசாரத்தை காட்டுகிறது என ராகுல் காந்தி பேசினார்.
இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா, நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.