துப்புரவு தொழிலாளர்களுடன் கலந்துரையாடல், உழைப்பவர்களுக்கு நாட்டில் முக்கியத்துவம் கிடைப்பது இல்லை - ராகுல் காந்தி
துப்புரவு தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி, உழைப்பவர்களுக்கு நாட்டில் முக்கியத்துவம் இல்லை என்று கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் சார்பில் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் துப்புரவு தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அவர் துப்புரவு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-
நாட்டில் உழைப்பவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைப்பது இல்லை. உழைக்காமல் இருப்பவர்களுக்கு அனைத்தும் கிடைக்கின்றன. இந்த நிலையை நாங்கள் மாற்றுவோம். உழைக்கும் மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்கள் அதிகம் உழைக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும்.
நான் இங்கு உரையாற்ற வரவில்லை. இதுவரை உங்களுக்கு அரசு என்ன வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இன்னும் என்ன திட்டங்கள் உங்களுக்கு வேண்டும் என்பதை சொல்லுங்கள். அதை நான் தெரிந்து கொள்கிறேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் துப்புரவு தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என ராகுல் காந்தி பேசினார்.
அப்போது பேசிய பெண் துப்புரவு தொழிலாளி ஜெயம்மா, “எங்களது சம்பளத்தை முதல்-மந்திரி உயர்த்தி இருக்கிறார். எங்கள் குழந்தைகளுக்கு இலவச கல்வி கிடைக்கிறது. நிறைய வசதிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இந்திரா காந்தி எங்கள் அம்மா“ என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய இன்னொரு பெண் துப்புரவு தொழிலாளர், “எங்களின் சம்பளத்தை அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் எங்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும். நாங்கள் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும்“ என்றார். இதற்கு சித்தராமையா பதிலளிக்கையில், “காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைத்து துப்புரவு தொழிலாளர்களின் பணியும் நிரந்தரம் செய்யப்படும். துப்புரவு தொழிலாளர்கள் வீடு கட்டினால் ரூ.7 லட்சம் அரசு மானியமாக வழங்குகிறது“ என்றார்.
முக்தார் என்ற துப்புரவு தொழிலாளர் பேசுகையில், “இதற்கு முன் நாங்கள் கடுமையான கஷ்டத்தில் இருந்தோம். சித்தராமையா முதல்-மந்திரி ஆன பிறகு எங்களின் கஷ்டங்களை போக்கியுள்ளார். சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்“ என்றார். இந்திரா உணவகம் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறதா? என்று ராகுல் காந்தி கேட்டார். அதற்கு துப்புரவு தொழிலாளர்கள் தங்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைப்பதாக கூறினர்.