செயல் திட்டம் இல்லாமல் புல்லட் ரெயில் அமல் - ராகுல் காந்தி
செயல் திட்டத்தை வகுக்காமல் புல்லட் ரெயில் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் சார்பில் தொழில் அதிபர்கள், வணிகர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் பெங்களூரு சென்டிரல் கல்லூரியில் உள்ள ஞானஜோதி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தொழில் அதிபர்கள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். அவற்றுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்து கூறியதாவது:-
நாட்டில் சரக்கு-சேவை வரி திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது 5 நிலைகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ‘கப்பர்சிங் டாக்ஸ்‘. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரேவிதமான வரியை கொண்ட சரக்கு-சேவை வரி அறிமுகம் செய்யப்படும்.
நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும். அத்துடன் வேலை வாய்ப்புகளும் பெருக வேண்டும். இது மிக முக்கியமானது. இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். எம்.பி.க்களின் போராட்டத்தால் மக்களவை கூட்டம் முடங்கியது. மக்களவை கூட்டத்தை சுமுகமாக நடத்துவதில் மத்திய பா.ஜனதா அரசு அக்கறை காட்டவில்லை.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கர்நாடகத்தில் துறைமுகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவை நாட்டின் 2-வது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலிக்கப்படும். நாட்டில் புல்லட் ரெயில் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கு ரூ.1 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் எந்த ஒரு செயல் திட்டமும் இன்றி அந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரெயில்வே துறையை மேம்படுத்த வேண்டியது அவசியம். புல்லட் ரெயில் திட்டத்தை தவிர்த்து அந்த ரூ.1 லட்சம் கோடியை இவற்றுக்கு பயன்படுத்தி இருக்கலாம். புல்லட் ரெயில் திட்டம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, உரிய செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து.
பண மதிப்பிழப்பு திட்டம், சரக்கு-சேவை வரி அமல் மற்றும் நிரவ்மோடி, விஜய் மல்லையா ஆகியோர் வங்கி கடனை பெற்று மோசடி செய்தது போன்றவற்றுக்கு இந்தியா அதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது என ராகுல் காந்தி கூறினார்.