காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ரெயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 11 -ந் தேதி திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-04-08 22:15 GMT
அனுப்பர்பாளையம், 

பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பூர்-அவினாசி ரோடு பெரியார்காலனியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் அல்போன்சா பாலமுருகன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் பிரதீப்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா, மாநில துணை செயலாளர் பழனிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை மறுநாள் (புதன்கிழமை) பா.ம.க. தலைமையில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், ஜூலை மாதம் 19-ந்தேதி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்ளும் விவசாயிகள் மாநாட்டை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் கோவை விசாலாட்சி, நாமக்கல் பொன்னுசாமி, மாநில துணை அமைப்பு செயலாளர்கள் ராஜேஷ், ராஜேந்திரன், மாநில அமைப்பு துணை தலைவர் ராஜேந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் அசோக் ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் கிருத்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்