காங்கிரசை விட்டு விலக மாட்டேன் - அம்பரீஷ்
காங்கிரசை விட்டு விலக மாட்டேன் என்று அம்பரீஷ் கூறினார்.
பெங்களூரு,
மண்டியா மாவட்ட காங்கிரசில் பலம் வாய்ந்த தலைவராக விளங்குபவர் பிரபல கன்னட நடிகரும், எம்.எல்.ஏ.வுமான அம்பரீஷ். உடல்நலக்குறைவு காரணமாக அவரிடம் இருந்து மந்திரி பதவி பறிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். காங்கிரஸ் மீது அவர் கடும் அதிருப்தியில் இருந்தார்.
இந்த நிலையில் நடிகர் அம்பரீஷ் காங்கிரசை விட்டு விலகி பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாயின. கடந்த வாரம் அவர் ஐதராபாத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவரை சந்தித்து பேசினார். இதனால் அவர் பா.ஜனதாவில் சேருவது உறுதி என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த தகவலை அம்பரீஷ் மறுத்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், “நான் எனது அரசியல் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறேன். காங்கிரசில் எனக்கு எல்லா ரீதியான பதவிகள் மற்றும் கவுரவம் கிடைத்தது. இதனால் காங்கிரசை விட்டு விலக மாட்டேன். மண்டியா தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டுமா? அல்லது அரசியலில் இருந்து விலக வேண்டுமா? என்பது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுப்பேன்“ என்றார்.