கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலரை விதிகளுக்கு புறம்பாக மாறுதல் செய்ததை கண்டித்தும், மதுரை ஐகோர்ட்டு பணி மாறுதலுக்கு தடை ஆணை பிறப்பித்தும் உத்தரவை ஏற்காமல் செயல்படுவதை கண்டித்தும் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-04-08 22:15 GMT
சிவகங்கை

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் திருப்புவனம் ஒன்றியம் கழுகேர்கடை கிராம நிர்வாக அலுவலரை விதிகளுக்கு புறம்பாக மாறுதல் செய்ததை கண்டித்தும், மதுரை ஐகோர்ட்டு பணி மாறுதலுக்கு தடை ஆணை பிறப்பித்தும் உத்தரவை ஏற்காமல் செயல்படுவதை கண்டித்தும் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாநில பிரசார செயலாளர் சுரேஷ், அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் குமார், சத்துணவு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் அம்சவள்ளி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்