காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கையெழுத்து இயக்கம் த.மா.கா சார்பில் நடந்தது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி த.மா.கா. சார்பில் சீர்காழியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Update: 2018-04-08 22:45 GMT
சீர்காழி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். நகர தலைவர் கனிவண்ணன், வட்டார தலைவர்கள் பண்டரிநாதன், சுந்தரவடிவேலு, வட்டார இளைஞர் அணி தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசை கண்டித்து பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் தம்பிதுரை, சின்ன மரைக்காயர், கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொள்ளிடம், புதுப்பட்டினம், பழையார், வைத்தீஸ்வரன்கோவில், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டன. 

மேலும் செய்திகள்