காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கட்டிட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கும்பகோணத்தில் கட்டிட தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-08 22:45 GMT
கும்பகோணம்,

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தேசிய கட்டிட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் தி.கா.ராமஜெயம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் இல்லாத நிலை இருப்பதால் பொதுமக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். எனவே மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்று தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி, கும்ப கோணம் நகர தலைவர் குமார், நகர செயலாளர் ஆனந்தன் மற்றும் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், வலங்கைமான் வட்டங்களை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் 80-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்