பழனி, திண்டுக்கல் வழியாக கோவை–செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கம்
கோவை–செங்கோட்டை இடையே கோடைகால சிறப்பு ரெயில் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.
பழனி,
கோவையில் இருந்து செங்கோட்டைக்கு கோடைகால சிறப்பு ரெயில் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வண்டி எண் 06021), ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு 11.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பழனிக்கு அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு வந்தடையும். பின்னர் திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக செங்கோட்டைக்கு காலை 9.20 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் ஜூலை மாதம் 2–ந்தேதி வரை இயக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06022) மதுரை, திண்டுக்கல், பழனி வழியாக கோவைக்கு அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் ஜூலை மாதம் 3–ந்தேதி வரை இயக்கப்படுகிறது.
இந்த 2 ரெயில்களுக்கும் அதிவிரைவு ரெயில்களுக்கான கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பழனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரூ.50–ம், மதுரைக்கு ரூ.70–ம், நெல்லைக்கு 115–ம், செங்கோட்டைக்கு ரூ.128–ம் முன்பதிவில்லாத இருக்கைக்கான கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே போல் கோவையில் இருந்து செங்கோட்டைக்கு படுக்கை வசதி கொண்ட முன்பதிவு இருக்கைக்கு ரூ.335–ம், 58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.177–ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.