வாடிப்பட்டி அருகே வேன் மீது அரசு பஸ் மோதல்; சிறுவன்-சிறுமி பலி
வாடிப்பட்டி அருகே வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் சிறுவன்-சிறுமி பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
வாடிப்பட்டி,
கோவை ரத்தினபுரி கண்ணப்பநகர் புதுதோட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). சொந்தமாக வேன் வைத்து ஓட்டிவருகிறார். இவருடைய மனைவி சரண்யா (28). இவர்களது மகன் ஹரீஷ் (15), மகள்கள் ஹரிணி (10), சூர்யாஸ்ரீ (6). இவர்கள் தங்களது உறவினர்களான வசந்தா (30), கங்காதேவி (68), பூபதி (30), தியானந்த் (13), சானியா (8) உள்பட 14 பேர் நேற்றுமுன்தினம் இரவு கோவையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தங்களின் குலதெய்வ கோவிலுக்கு வேனில் புறப்பட்டு சென்றனர்.
அந்த வேனை சரவணன் ஓட்டி வந்தார். அதேபோல கோபிசெட்டிபாளையத்தில் இருந்து மதுரைக்கு ஒரு அரசு பஸ் வந்தது. அதை டிரைவர் பூபதி என்பவர் ஓட்டிவந்தார். இந்தநிலையில் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி கண்மாய் பகுதியில் திண்டுக்கல்-மதுரை தேசியநெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை வேனும், அரசு பஸ்சும் வந்த போது, எதிர்பாராத நிலையில் வேனின் பின்புறம் அரசு பஸ் மோதியது.
இதில், வேன் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி எதிர்புற சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் தியானந்த்(13), சிறுமி சானியா(8) ஆகியோர் பலியானார்கள். சரவணன், சரண்யா, ஹரீஷ், ஹரிணி, சூர்யாஸ்ரீ, வசந்தா, கங்காதேவி, பூபதி ஆகிய 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்குமார் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.