நேரடி நியமனத்தால் முக்கியத்துவம் இழப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த இளைஞர்கள் விரக்தி
சமீபகாலமாக அரசின் பல்வேறு துறைகள் நேரடி நியமன நடைமுறையை கடைபிடிப்பதால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் முக்கியத்துவத்தை இழந்துள்ள நிலையில் பதிவு செய்தாலும் பலனில்லை என படித்த இளைஞர்கள் விரக்தி அடையும் சூழ்நிலை உள்ளது.
விருதுநகர்,
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைநகரங்களில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி படிப்பை முடித்த உடனேயே வேலைவாய்ப்பினை பெறும் நோக்கத்தோடு இளைஞர்களும், இளம் பெண்களும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்வது வாடிக்கையாக இருந்து வந்தது. அதிலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்த உடனேயே வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய பெரும் கூட்டம் வரும் நிலை இருந்ததால் அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் நிலையும் இருந்தது.
இது தவிர என்ஜினீயரிங் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கென தங்களது பெயர்களை பதிவு செய்ய மதுரை மற்றும் சென்னையில் அதற்கென சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நிலையில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
கடந்த காலங்களில் அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் பணியாளர்களை தவிர அரசுத்துறைகளில் அலுவலக உதவியாளர், ஓட்டுனர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து இட ஒதுக்கீடு முறையில் பதிவு மூப்பு அடிப்படையில் பதிவு செய்தவர்களின் பட்டியலை கேட்டுப் பெற்று அவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தி பணியாளர்களை நியமனம் செய்யும் நடைமுறை இருந்து வந்தது.
ஆனால் சமீபகாலமாக அரசின் பல்வேறு துறைகளிலும் அரசு சார்ந்த நிறுவனங்களிலும் பணியாளர்களை நேரடி நியமன முறையில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நியமனம் செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது. கால்நடை உதவியாளர், ரேஷன் கடை பணியாளர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி பணியாளர், ஊராட்சி எழுத்தர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நேரடியாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நியமனங்கள் செய்யப்படுகின்றன. போக்குவரத்துக் கழகங்களில் கூட நேரடி நியமன முறையே கடைபிடிக்கப்படும் நிலை உள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கு கூட வேலைவாய்ப்பு அலுவலக பதிவிற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
இதனால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பணியாளர் நியமன நடைமுறையில் தனது முக்கியத்துவத்தை இழந்துள்ளன. தற்போதுள்ள நிலையில் பதிவு செய்த படித்த வேலை இல்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நடைமுறைக்கே வேலைவாய்ப்பு அலுவலகம் பயன்படும் நிலை உள்ளது.
படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தாலும் பலனில்லை என்று விரக்தி அடைந்துள்ளனர். 30 வருடங்களுக்கு முன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் இதுவரை ஒரு நேர்முகத் தேர்வுக்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என பதிவு செய்த பலர் வேதனைப்படும் நிலையே உள்ளது. நேரடி நியமன நடைமுறையில் பல முறைகேடுகள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசு, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணி நியமனங்கள் செய்ய உரிய நடவடிக்கை எடுத்தால் பதிவு மூப்பு உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதுடன் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இழந்த முக்கியத்துவத்தை மீண்டும் பெற வழி ஏற்படும்.