கணவரிடம் கோபித்துக்கொண்டு வந்ததால் தகராறு: அக்காளை வெட்டி கொன்று எரித்த தம்பி கைது
கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்ததால் ஏற்பட்ட தகராறில் அக்காளை வெட்டி கொலை செய்து, உடலை எரித்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை உக்கடத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா (30). இவர்களுக்கு அத்தியாஸ்ரீ (8) என்ற பெண் குழந்தை உண்டு. சுரேஷ் சரியாக வேலைக்கு செல்லாததால், அவருடன் தகராறில் ஈடுபட்டுவிட்டு சங்கீதா அடிக்கடி தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
அப்படி கடந்த சில வாரத்துக்கு முன்னும் உப்பிலிபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சங்கீதா சென்றிருந்தார். பின்னர் திரும்பி செல்லவில்லை. இது அவரது தம்பி சரவணகுமாருக்கு (27) ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. எனவே அவர் கடந்த 6-ந்தேதி இரவு சங்கீதாவுடன் தகராறில் ஈடுபட்டார்.
பின்னர் நேற்று முன்தினம் காலையிலும் சங்கீதாவின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணகுமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவின் கழுத்தில் ஓங்கி வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சங்கீதா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதைத்தொடர்ந்து சங்கீதாவின் உடலை பெரிய சூட்கேசில் வைத்து மோட்டார் சைக்கிள் மூலம் கோவை விமான நிலையத்துக்கு பின்புறம் சரவணகுமார் கொண்டு சென்றார். இதற்காக சங்கீதாவின் மகள் அத்தியாஸ்ரீயையும் தன்னுடன் அழைத்து சென்றார்.
பின்னர் அங்குள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் வைத்து சங்கீதாவின் உடலில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார். பின்னர் அத்தியாஸ்ரீயை வீட்டில் விட்டுவிட்டு சரவணகுமார் தப்பிச்சென்று விட்டார்.
சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்த சங்கீதாவின் பெற்றோர் அத்தியாஸ்ரீ கூறிய தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், எஸ்.ஐ.எச்.எஸ். காலனிக்கு சென்று பார்த்தபோது, சங்கீதாவின் தலைப் பகுதியை தவிர மீதமுள்ள பகுதி அனைத்தும் எரிந்து கரிக்கட்டையாகி கிடந்தது. அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொடூரமான முறையில் நடந்த இந்த கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.