கூடலூர் அருகே காலில் வீக்கம் குணமடைந்த யானை ஊருக்குள் வருகிறது, பொதுமக்கள் அச்சம்
கூடலூர் அருகே காலில் வீக்கம் குணமடைந்த யானை உணவு தேடி ஊருக்குள் வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.;
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி கிளன்வன்ஸ் பகுதியில் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் காலில் வீக்கத்துடன் ஒரு காட்டு யானை அவதிப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஓவேலி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு யானையின் நடவடிக்கையை கண்காணித்து வந்தனர்.
அப்போது நாளுக்குநாள் காட்டு யானையின் கால் வீக்கம் அதிகரித்ததை கண்டனர். மேலும் காட்டு யானையும் நடக்க முடியாமல் ஒரே இடத்தில் நின்றிருந்தது. காட்டு யானையால் நடக்க முடியாமல் இருந்ததால் பசுந்தீவனங்களை தேடி சென்று சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. உணவு சாப்பிடாமல் இருந்ததால் அதன் உடல்நிலை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இதனால் வனத்துறையினர் காட்டு யானை நின்றிருந்த பகுதியில் இரவு பகலாக முகாமிட்டு கூந்தப்பனை, பாக்கு தழைகள், வாழைத்தண்டுகள் உள்ளிட்ட பசுந்தீவனங்களை 2 வாரங்களுக்கு மேலாக வழங்கி வந்தனர்.
இதற்காக வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களில் பசுந்தீவனங்கள் பல இடங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்டது. இதனால் நடக்க முடியாமல் நின்றிருந்த காட்டு யானைக்கு நல்ல உணவு கிடைத்தது. வனத்துறையினரின் உபசரிப்பால் காட்டு யானையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால் காட்டு யானையின் கால் வீக்கம் மட்டும் குறைய வில்லை. இதைத்தொடர்ந்து காட்டு யானையின் கால் வீக்கத்தை குணப்படுத்த மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவை மண்டல வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் கொண்ட மருத்துவ குழு வரவழைக்கப்பட்டது. முதற்கட்டமாக காட்டு யானைக்கு வாழைப்பழங்கள், ராகி கழி, வாழைத்தண்டுகளுக்கு இடையே வலி நிவாரண மாத்திரைகளை மறைத்து வைத்து வழங்கப்பட்டது.
இதை உண்ட காட்டு யானையின் கால் வீக்கம் சில நாட்களில் நன்றாக குணம் அடைந்தது. இருப்பினும் வனத்துறையினர் ஊட்டச்சத்து உணவுகளை மாலை நேரத்தில் தினமும் வழங்கி வந்தனர். கால் வீக்கம் குணம் அடைந்து விட்டதால் யானையால் மீண்டும் நன்றாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்து விட்டது. இதனால் வனத்துறையினர் பசுந்தீவனங்கள், ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவதை நிறுத்தி விட்டனர்.
தொடர்ந்து உணவு கிடைக்கும் என எதிர்பார்த்த காட்டு யானை ஏமாற்றம் அடைந்தது. இதனால் காட்டு யானை கிராம மக்களை கண்டதும் அவர்கள் சாப்பிடுவதற்கு உணவு அளிப்பார்கள் என்ற நினைப்பில் பகல் நேரத்தில் ஊருக்குள் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. வீடுகளின் முன்பு நின்று தும்பிக்கையை நீட்டி சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என தேடுகிறது.
இது குறித்து பெரியசோலை, சீபுரம், எல்லமலை பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-
வனத்துறையினர் சிகிச்சை அளித்த காட்டு யானை எந்த நேரமும் ஊருக்குள் வந்து நிற்கிறது. இதனால் நிம்மதியாக நடக்க முடிவது இல்லை. பள்ளிக்கூடம் சென்று விட்டு குழந்தைகள் வீடு திரும்பும்போது அச்சத்துடன் வர வேண்டிய நிலை உள்ளது. பகல் மட்டுமின்றி இரவிலும் வீடுகள் அருகே வந்து நிற்கிறது. தகவலின் பேரில் வன ஊழியர்கள் விரட்டுகின்றனர். ஆனால் மீண்டும் ஊருக்குள் வந்து நிற்கிறது. இந்த யானையை பிடித்து முதுமலையில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைக்கு வயதாகி விட்டது. கால் வீக்கத்தால் நடக்க முடியாமல் இருந்த நாட்களில் பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டது. தற்போது அந்த யானை தானாகவே உணவு உண்டு வருகிறது. ஊருக்குள் வருவதை தடுக்க வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர், என்றனர்.