ஒரகடம் பகுதியில் புதர் மண்டி கிடக்கும் மாவட்ட கிளை நூலகம், சீரமைக்க கோரிக்கை
ஒரகடம் பகுதியில் புதர் மண்டி கிடக்கும் மாவட்ட கிளை நூலகத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் தமிழக அரசின் பொது நூலகத்துறையின் கீழ் இயக்கப்படும் மாவட்ட கிளை நூலகம் 1966-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் பக்தவச்சலத்தால் திறக்கப்பட்டது. அந்த நூலக கட்டிடம் பழுதடைந்ததையடுத்து 1998-ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள மற்றொரு இடத்திற்கு நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதில் ஒரகடம் பகுதியை சுற்றியுள்ள வடக்குப்பட்டு, சென்னகுப்பம், எழிச்சூர், வல்லக்கோட்டை, வைப்பூர், வட்டம்பாக்கம், மாத்தூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலகத்தில் நிரந்தர உறுப்பினர்கள் 40-க்கு மேற்பட்டோரும் நீண்ட கால நூலக உறுப்பினர்கள் 750 க்கும் மேற்பட்டோரும் உள்ளனர்.
இந்த நூலக கட்டிட பகுதியில் தற்போது புதர் மண்டி குப்பைகளுடன் உள்ளதால், பாம்பு, தேள், மற்றும் விஷ வண்டுகள், அடிக்கடி வந்து செல்வதால் நூலகத்திற்கு வரக்கூடியவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. சில சமயங்களில் நூலகத்தின் உள்ளே உறுப்பினர்கள் படித்து கொண்டிருக்கும் போது பூரான், பூச்சிகள், விஷ வண்டுகள் வந்து செல்கிறது. இதனால் நூலகத்திற்கு வரும் பள்ளி கல்லூரி மாணவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே புதர்கள் மண்டி இருக்கும் இடத்தை சீர மைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்லூரி மாணவர்கள், நூலக உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.