சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கர்நாடக பா.ஜனதா உயர்மட்ட குழு ஆலோசனை

கர்நாடக பா.ஜனதா கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று பெங்களூரு எலகங்காவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

Update: 2018-04-08 00:00 GMT
பெங்களூரு,

மாநில தலைவர் எடியூரப்பா  இந்த கூட்டத்திற்கு  தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக ஈசுவரப்பாவுக்கு ‘சீட்‘ வழங்குவது, ஹாலப்பா மற்றும் பேளூர் கோபால கிருஷ்ணாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும், அவர்களில் யாருக்கு டிக்கெட் கொடுப்பது என்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் வெற்றி பெறும் வேட்பாளர்கள் 140 பேரை அடையாளம் கண்டு, அதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலுக்கு கட்சி மேலிடம் அனுமதி அளிப்பதை தொடர்ந்து, முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை (திங்கட்கிழமை) வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் செய்திகள்