பா.ஜனதா குரலில் மாற்றம் தெரிகிறது மந்திரி சுபாஷ் தேசாய் பேச்சு
பா.ஜனதா குரலில் மாற்றம் தெரிவதாக சிவசேனா மந்திரி சுபாஷ் தேசாய் பேசினார்.
தானே,
தானே மாவட்டத்தில் சிவசேனா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய தொழில்துறை மந்திரியுமான சுபாஷ் தேசாய் பேசியதாவது:-
மராட்டியத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரெயிலில் பயணிக்கும் பெண் பயணிகளை பாதுகாக்க சிவசேனா தொண்டர்கள் அடங்கிய பாதுகாப்பு படை அமைக்கப்படும்.
பா.ஜனதா கட்சியின் குரலில் மாற்றம் தெரிகிறது. 6 மாதங்களுக்கு முன்பு வரை 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தனிப்பெரும் மெஜாரிட்டி பெறுவோம் என பேசி வந்த பா.ஜனதா தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி மெஜாரிட்டி பெறும் என தனது பேச்சை மாற்றி உள்ளது.
மாநிலத்திலேயே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்குதான் மக்கள் செல்வாக்கு அதிகம். அவர் கூறியபடி வரும் சட்டமன்ற தேர்தலில் சிவசேனா தனித்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.