ஈரோட்டில் நடந்த மறியலின்போது அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தி.மு.க. பிரமுகர் கைது

ஈரோட்டில் நடந்த மறியலின்போது அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-04-07 23:02 GMT
ஈரோடு,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த 5-ந் தேதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஈரோட்டில் பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம் எதிரில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். மேலும் காளை மாட்டு சிலை அருகில் சாலை மறியல் போராட்டமும் நடந்து. அப்போது வெள்ளக்கோவிலில் இருந்து ஈரோட்டுக்கு வந்த அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாக, ஈரோடு கருங்கல்பாளையம் பகுதி தி.மு.க. துணைச்செயலாளரான மகேஸ்வரன் (வயது 47) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

மேலும் செய்திகள்