பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை 2 வாலிபர்கள் கைது

மும்பையை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போனுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி ஆபாச குறுந்தகவல் வந்தது.

Update: 2018-04-07 22:59 GMT
மும்பை,

பெண் குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டார். அதன்பிறகு பல்வேறு செல்போன் எண்களில் இருந்து அவரது செல்போனுக்கு ஆபாச வீடியோ, குறுந்தகவல் வந்தது.

இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்து, பாந்திரா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் பெண்ணிற்கு ஆபாச வீடியோ, குறுந்தகவல் அனுப்பியதாக அந்தேரியை சேர்ந்த இம்ரான் சேக் (வயது19), விக்ரோலியை சேர்ந்த இஸ்லாம் சேக் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்