மத்திய அரசை கண்டித்து தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஓசூரில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், அதற்கு அழுத்தம் கொடுக்காத தமிழக அரசையும் கண்டித்து, ஓசூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ரெயில் நிலையத்தின் நுழைவாயில் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பரசன், சங்கர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன கோஷங்கள்
இதில் நகர செயலாளர் கணேசன், நகர அவைத்தலைவர் ரேணுகுமார், வக்கீல் முருகேசன் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தடையை மீறி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.