மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டை கண்டித்து 7 இடங்களில் விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல், 827 பேர் கைது
மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து புதுவை மாநிலத்தில் 7 இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 827 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 20-ந் தேதி தீர்ப்பளித்தது. அதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி அரசு ஊழியர் மீது புகார் கொடுக்கப்பட்டால் மேல் அதிகாரியின் அனுமதி பெற்ற பிறகு தான் கைது செய்ய வேண்டும். அந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்று டி.எஸ்.பி. விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த தீர்ப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டை கண்டித்து உப்பளம், உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை தொகுதிகள் சார்பில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் அகன், திருக்குமரன், கலைச்செல்வன், கன்னியப்பன், செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இது பற்றிய தகவல் அறிந்து உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 80 பேரை கைது செய்தனர்.
இதேபோல் உழவர்கரை, கதிர்காமம், நெல்லித்தோப்பு, தட்டாஞ்சாவடி தொகுதி சார்பில் இந்திராகாந்தி சிலை அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு கட்சியின் செயலாளர் அமுதவன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் முன்னவன், லட்சுமி, கோவிந்தராஜ், தம்பி வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் திடீரென காரின் டயரில் துணியை சுற்றி அதில் தீ வைத்து சாலையில் உருட்டி விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அருகில் உள்ள கடைகளில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 57 பேரை கைது செய்தனர்.
காமராஜ் நகர், ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, லாஸ்பேட்டை தொகுதிகள் சார்பில் அஜந்தா சிக்னல் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். இதில் இளஞ் செழியன், பருதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இது பற்றிய தகவல் அறிந்து முத்தியால்பேட்டை போலீசார் அங்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 38 பேரை கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம், திருபுவனை, திருக்கனூர் தொகுதிகள் சார்பில் மதகடிப்பட்டில் உள்ள காமராஜர் தூண் அருகில் சாலை மறியல் நடந்தது. இந்த போராட்டத்திற்கு திருபுவனை தொகுதி செயலாளர் ஈழவளவன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் செல்வநந்தன், சிவசங்கரன், முத்தமிழன், சிந்தனைசெல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரியா, பிரதாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 70 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், பாகூர் தொகுதிகள் சார்பில் தவளக்குப்பத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்மாறன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் தமிழ்வளவன், புதியவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தவளக்குப்பம் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர்.
ஊசுடு தொகுதி சார்பில் பத்துக்கண்ணு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு பொதினிவளவன் தலைமை தாங்கினார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர் மங்கலம் தொகுதிகள் சார்பில் வில்லியனூர் புறவழிச்சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் செல்வ.நந்தன், சிவந்தவன், முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வில்லியனூர் போலீசார் அங்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 430 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.