காவிரி பிரச்சினையில் எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
காவிரி பிரச்சினையில் எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை என்றால், தமிழகம் குலுங்கும் அளவுக்கு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று காவிரி உரிமை மீட்பு பயண தொடக்க நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருச்சி,
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தராத மாநில அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் கடந்த 1-ந் தேதி முதல் ரெயில் மறியல், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 5-ந் தேதி தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக திருச்சியில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு பயணத்தை நடத்த தி.மு.க. தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 7-ந் தேதி (நேற்று) திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கி, வருகிற 12-ந் தேதி கடலூரில் பயணத்தை நிறைவுசெய்வது என்று திட்டமிடப்பட்டது. இந்த பயணத்தில் மு.க.ஸ்டாலின் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு விவசாயிகளையும், பொதுமக்களையும் சந்திக்கிறார். இதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்பட பலரும் வந்தனர். திருச்சி விமானநிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காவிரி உரிமை மீட்பு பயண தொடக்க நிகழ்ச்சிக்காக திருச்சி முக்கொம்பு மேலணை அருகே மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மு.க.ஸ்டாலின் மாலை 4.05 மணி அளவில் நிகழ்ச்சி மேடைக்கு வந்தார். மேடையில் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் சார்பில் திருச்சி வேலுச்சாமி, ம.தி.மு.க. அவைத்தலைவர் துரைசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் அமர்ந்து இருந்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு வரவேற்றார். இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
காவிரி உரிமை மீட்பு பயணம் 2 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு, முதல் பயணமாக முக்கொம்பில் இருந்து தொடங்குகிறது. வரும் 9-ந் தேதி அரியலூரில் இருந்து 2-வது பயணம் தொடங்குகிறது. என்னை பொறுத்தவரை பேச்சை குறைத்து செயலில் திறமையை காட்ட வேண்டும். இந்த பயணம் முடியும் முன்பு 9-ந் தேதி காவிரி பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்க இருக்கிறது. அப்போது நாம் எதிர்பார்க்கிற ஒரு தீர்ப்பு வரும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை அந்த தீர்ப்பு நாம் எதிர்பார்த்தது போல் வரவில்லை என்றால் இந்த பயணத்தை மேலும் பெரிதாக்கி தமிழகமே குலுங்கக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தக்கூடிய சூழ்நிலை வரும்.
ஆளுங்கட்சியான அ.தி.மு.க.விடம் எவ்வளவோ வேண்டுகோள் வைத்தோம். காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க. அரசுடன் கைகோர்ப்பதில் எந்த கவுரவமும் பார்க்கவில்லை. இது அரசியல் பயணம் அல்ல. நம் உரிமையை பெறுவதற்கான பயணம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால் அந்த தீர்ப்பை ஏற்க முடியாது என்று கர்நாடக முதல்-மந்திரி அறிவிக்கிறார். மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்காரியும் அதையே கூறுகிறார். அந்த துறையின் செயலாளரும் அவ்வாறே சொல்கிறார். அதனை கண்டிக்கக்கூட இந்த ஆட்சி இல்லை என்றால் அதைவிட வெட்கம் வேறு என்ன இருக்கப்போகிறது.
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். வேறு வழியில்லாமல் நமது கோரிக்கையை ஏற்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார்கள். அப்போது நாம் திட்டமிட்டு இருந்த கூட்டத்தை ரத்து செய்து விட்டு அவர்கள் கூட்டிய கூட்டத்துக்கு சென்றோம். அந்த கூட்டத்தில் பேசியதை இந்த அரசு நிறைவேற்றியதா?. அதன்பிறகு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக சட்டமன்றத்தை கூட்டினார்கள். அப்போது ஒரு சிறப்பு கூட்டம் போட்டு ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். அப்போது அவர்கள் எங்களிடம் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?. அரசு கொண்டு வரும் தீர்மானத்தை அப்படியே ஆதரிக்க வேண்டும் என்பது தான்.
அப்போது அவர்களிடத்திலே நீங்கள் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்கிறோம். அதேநேரத்தில் இங்குள்ள பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்ட வேண்டும். எங்கள் கருத்துகளை சட்டமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சொன்னபிறகு, அதற்கு ஒப்புதல் தந்தார்கள். அப்போது உங்கள் கட்சியை சேர்ந்த 50 எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும். அடுத்த வினாடியே தி.மு.க.வை சேர்ந்த 4 எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம். அதற்கு அடுத்தாற்போல் தி.மு.க.வின் 89 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்கிறோம் என்று சொன்னோம். ஆனால் அதற்காக அவர்கள் ஒரு துளி கூட நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசியாக சட்டமன்றத்தில் காவிரி பிரச்சினை தொடர்பாக கேள்வி எழுப்பியபோது, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் கொடுத்த காலக்கெடு மார்ச் 29-ந் தேதி வரை இருக்கிறது. அதுவரை பொறுத்து இருங்கள். அதன்பிறகு நல்லமுடிவு எடுப்போம் என்றார். அந்த முடிவை எடுத்தார்களா?.
அதனால் தான் எதிர்க்கட்சிகளாகிய நங்கள் ஒன்றுகூடி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். முழு அடைப்பு போராட்டம் நடத்தினோம். இப்போது காவிரி உரிமை மீட்பு பயணம் தொடங்கி இருக்கிறோம். இந்த பயணத்தை திராவிடர் கழக தலைவர் வீரமணி தொடங்கி வைக்கிறார். கடலூரிலும் இந்த பயணத்தை அவரே முடித்து வைக்கிறார். கடந்த 1938-ம் ஆண்டு தலைவர் கருணாநிதி தொடங்கிய நடைபயணத்தை இதே திருச்சியில் பெரியார் தொடங்கி வைத்தார். தற்போது 2018-ம் ஆண்டு பெரியாரின் வாரிசான ஆசிரியர் கி.வீரமணி இந்த பயணத்தை தொடங்கி வைத்துள்ளார். அந்த பயணம் வெற்றிபெற்றதுபோல், இந்த பயணமும் நிச்சயமாக வெற்றி பெற போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மேடையில் இருந்து தோழமை கட்சி தலைவர்களுடன் ஊர்வலமாக நடந்து வந்து முக்கொம்பு அருகே 60 அடி உயர கம்பத்தில் காவிரி உரிமை மீட்பு பயண கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு காவிரி உரிமை மீட்பு பயணம் குறித்து அமைக்கப்பட்டு இருந்த கல்வெட்டையும் திறந்து வைத்தார். அதன்பிறகு மாலை 5.25 மணி அளவில் மு.க.ஸ்டாலின் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக நடந்து சென்றார். அப்போது வழிநெடுக திரண்டு இருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக கைகளை காட்டி ஆரவாரம் செய்தனர்.
சிறிது தூரம் நடந்து சென்ற அவர் அங்கிருந்து வேனில் சென்று, அல்லூர் அருகே வந்ததும் வேனில் இருந்து கீழே இறங்கி அங்கு திரண்டு நின்ற பொதுமக்கள் முன்பு உரையாற்றினார். பின்னர் அவர் ஜீயபுரம் அருகே சாலையோரம் மரக்கன்றையும் நட்டார். பின்னர் அவர் அங்கிருந்து வேனில் ஏறி சென்றார். மு.க.ஸ்டாலினை பின்தொடர்ந்து தி.மு.க.வினர் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் அதிகளவில் காரில் சென்றனர்.
இதனால் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அந்த சாலையில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. திருச்சியில் இருந்து கரூர் வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து மு.க.ஸ்டாலின் வேனில் சத்திரம் பஸ்நிலையம், இந்திராகாந்தி மகளிர் கல்லூரி, மெயின்கார்டுகேட், தஞ்சைரோடு, பால்பண்ணை பைபாஸ்ரோடு இருந்து சர்க்கார்பாளையம், முல்லைக்கொடி, வேங்கூர் வழியாக மு.க.ஸ்டாலின் கல்லணை சென்றடைந்தார்.