மத்திய அரசை கண்டித்து போராட்டம் திருச்சியில் இந்தி பிரசார சபா அலுவலகம் மீது கருப்பு மை வீச்சு
திருச்சியில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர், இந்தி பிரசார சபா மீது கருப்பு மையை வீசினர். இதனால் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது.
திருச்சி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சி தென்னூரில் உள்ள இந்தி பிரசார சபா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். இதனால் நேற்று காலை தென்னூர் இந்தி பிரசார சபா அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அந்த அலுவலகத்துக்குள் யாரும் நுழைந்துவிடாதபடி அலுவலக நுழைவுவாயில் மூடப்பட்டதுடன், இரும்பு தடுப்புகளையும் வைத்து போலீசார் மறித்து இருந்தனர்.
இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் சாஸ்திரிரோட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி வந்தனர். இந்தி பிரசார சபா அலுவலகம் அருகே வந்ததும், அவர்கள் மோடியின் உருவப்படத்தையும், பா.ஜ.க. கொடியையும் தீவைத்து எரித்தார்கள். உடனடியாக போலீசார் எரிந்த நிலையில் இருந்த மோடியின் உருவப்படத்தை கைப்பற்றினார்கள். இதையடுத்து அவர்கள் ரெயில் நிலையத்தின் பெயர் பலகையில் இந்தி எழுத்துக்கள் இருப்பதை சித்தரித்து அச்சிடப்பட்ட ஒரு பிளக்ஸ் பேனரை கொண்டு வந்தனர்.
அந்த பிளக்ஸ் பேனரில் இந்தி எழுத்துகள் இருந்ததை கருப்பு மை மூலம் அழித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதனால் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இளைஞர்கள் சிலரை போலீசார் தாக்கி கைது செய்ததால், போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர், தென்னூர் மேம்பாலம் மீது நின்றபடி இந்தி பிரசார சபா அலுவலக பெயர் பலகை மீது கருப்பு மையை வீசினர். இதனைக்கண்ட போலீசார் தென்னூர் மேம்பாலத்துக்கு ஓடிச்சென்று அங்கு கருப்பு மை வீசிய இளைஞர்களை கைது செய்தனர்.
இதற்கிடையே மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த சரவணன் இந்தி பிரசார சபா அலுவலக கதவின் மீது முகப்பு வாயிலில் இருந்த பதாகையை கிழித்து எறிந்தார். இதனைக்கண்ட போலீசார் சுவர் மீது ஏறி, அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். பின்னர் அவரை அடித்து, உதைத்து போலீஸ் வேனில் ஏற்ற இழுத்து சென்றனர். இதனால் அங்கு மீண்டும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சரவணனை கைது செய்து வேனில் ஏற்றினர்.
அவரிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்டனர். அப்போது போலீஸ்காரர் ஒருவர் பத்திரிகையாளரை பிடித்து தள்ளி விட்டதால் மற்ற பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பத்திரிகையாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் தாக்கியதாக கூறி, பத்திரிகையாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். தொடர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 76 பேரை போலீசார் கைது செய்தனர்.