குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
விராலிமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கோடாலிகுடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அன்றாட குடிநீர் தேவைக்கு ஆழ்துழாய் கிணறு அமைத்து, 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர வராததால் பொதுமக்கள் அடிபம்புகளை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த அடிபம்புகளிலும் குடிநீர் வருவது முற்றிலும் நின்று விட்டது. இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து புதிதாக 2 ஆழ்துளை கிணறுகள் ஊராட்சி சார்பில் அமைத்து கொடுக்கப்பட்டது. ஆனால் அதில் இருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் விராலிமலை-மணப்பாறை சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.