மத்திய அரசை கண்டித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் சாலை மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டி அருகே காவிரி உரிமை மீட்பு குழுவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-07 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி கடைத்தெருவில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஜெயபால், நகர செயலாளர் ரமேஷ், கோட்டூர் ஒன்றிய செயலாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்