விவசாயிகளுக்கு ரூ.3½ கோடி மதிப்பில் வேளாண் உபகரணங்கள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரத்தில் நடந்த விழாவில் விவசாயிகளுக்கு ரூ.3½ கோடி மதிப்பிலான வேளாண் உபகரணங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

Update: 2018-04-07 23:15 GMT
விழுப்புரம்,

வேளாண்மை துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் கூட்டு பண்ணையம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கும் விழா விழுப்புரத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிர மணியன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராஜேந்திரன், ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் இணை இயக்குனர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு 56 குழுக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 56 லட்சம் மதிப்பிலான டிராக்டர், பவர் டில்லர், ரோட்டவேட்டர், நெல் நடவு எந்திரங்கள், அறுவடை எந்திரம், விசை களையெடுக்கும் எந்திரம், விதை விதைக்கும் எந்திரம் உள்ளிட்ட வேளாண் உபகரணங்களை வழங்கினார்.

விழாவில் விழுப்புரம் கோட்டாட்சியர் சரஸ்வதி, தாசில்தார் சுந்தர்ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) செல்வசேகர், வேளாண் அலுவலர் சுரேஷ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) சிங்காரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சுதாகர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்