காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சாயல்குடியில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாயல்குடி,
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சாயல்குடியில் தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையி்ல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் அசோகன், பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட துணை செயலாளர்கள் சதக், நாககன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா பேசும்போது, காலம்காலமாக காவிரி நீர் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இதற்கு முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ், தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க., தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் காவிரி பிரச்சினைக்கு எந்த தீர்வும் காணவில்லை.
தமிழக விவசாயிகளுக்காக தே.மு.தி.க. துணை நிற்கும். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க தே.மு.தி.க. பாடுபடும் என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வடிவேல், கேப்டன் மன்ற செயலாளர் முத்துப்பாண்டி, கடலாடி ஒன்றிய பொறுப்பாளர் மாணிக்கவேல், சாயல்குடி பேரூர் கழக பொறுப்பாளர் முகம்மது ரபிக், மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்துக்கனி, பரமேசுவரி, நளாவதி ஒன்றிய மகளிர் அணி பொறுப்பாளர் முருகேஸ்வரி, நகர் மகளிரணி சுப்புலட்சுமி, ராமேசுவரம் நகர் செயலாளர் முத்துக்காமாட்சி, ஒன்றிய செயலாளர்கள் திருப்புல்லாணி கக்கிம், முதுகுளத்தூர் செந்தூர்பாண்டியன், மண்டபம் தங்கப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.